"DKS குறித்த ப்ளூ ஃபிலிம் போஸ்டர் சர்ச்சை" - குமாரசாமி சரமாரி விமர்சனம்... அதிரும் கர்நாடக அரசியலில்

x

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மலையாள நீலப்படத்திற்கு போஸ்டர் ஒட்டியவர் என முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தீபாவளிக்காக வீட்டில் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகளுக்கு சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்றதற்காக கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி அபராதம் கட்டியிருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மின்சார திருடன் என்று குமாரசாமி புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குமாரசாமி ஆளும் காங்கிரஸ் கட்சியையும் துணை முதல்வர் டி கே சிவக்குமாரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தனது சொந்த ஊரில் மலையாள நீலப்படத்திற்கு போஸ்டர் ஒட்டிய டி கே சிவகுமாருக்கு எப்படி நல்ல எண்ணங்கள் வரும் என கேள்வி எழுப்பினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் குற்றங்களை முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீட்டு முன்பு போஸ்டராக ஓட்டிவிடுவார்களோ என்ற பயத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்