Ponmudi Controversy | பொன்முடி வழக்கு.. அடுத்த பரபரப்பு
பொன்முடி வழக்கு- சிபிஐக்கு மாற்ற கோரி மனு
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகை யில் பேசியதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதை விசாரித்த சைபர் க்ரைம் போலீசார், முகாந்திரம் இல்லை எனக்கூறி புகாரை முடித்து வைத்தனர்.
இந்நிலையில், பொன்முடிக்கு எதிராக புகார்கள் மீதான விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Next Story
