Ponmudi | பொன்முடி மீதான வழக்கு - சாட்சியாக ஆஜரான போலீஸ்
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஜயராகவன் ஆஜராகி 4 மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார். செம்மண் குவாரியில் அனுமதியை மீறி லாரிகளில் செம்மண் எடுத்ததன் காரணமாக, கடந்த 2012-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பு சாட்சியாக, இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீஸ் அதிகாரி ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதையடுத்து நீதிபதி மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக, இவ்வழக்கை வருகிற 23-ம் தேதி ஒத்திவைத்தார்.
Next Story
