மெரினாவில் நடக்கவிருந்த பாஜக நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த போலீஸ்

x

சென்னை மெரினா பகுதியில், பா.ஜ.க. நிகழ்ச்சிக்கு

கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்ததாக அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியை நடுக்குப்பம் மீன் மார்க்கெட் அருகில், காணொலி காட்சி வாயிலாக நடத்தவும், பா.ஜ.க. மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மீனவர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கவும் பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், நிகழ்ச்சியை நடத்த போலீசார் திடீரென அனுமதி மறுத்துவிட்டதாக பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்காக போடப்பட்டிருந்த ஸ்பீக்கர், மேடை மற்றும் பந்தல் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ஜ.க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்