துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மகன் இன்பநிதிக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. நாங்கள் தலைமறைவாக இருக்கும் தமிழ் விடுதலை அமைப்பு என்றும், கொலையாளியை வேலைக்கு அமர்த்தி உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்துள்ள நபர்கள் 10 கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசி சதித்திட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு இமெயில்களில் இருந்து இந்த மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
