மனதின் குரல் - யோகாசனம், தண்ணீர் சிக்கனம் குறித்து பிரதமர் மோடி பேச்சு
யோகாசனம், இந்தியாவில் இருந்து மனித குலத்திற்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், புத்தாண்டு கொண்டாடும் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிர மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கோடைக் காலம் நெருங்கி வருவதால், தண்ணீரைச் சேமிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மக்கள் தங்கள் வாழ்க்கையில் யோகாசனத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, யோகாசனம், எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Next Story
