தேர்தல் முடிவுகள் குறித்து மனம் விட்டு பேசிய பிரதமர் மோடி

தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்கள் சேவை செய்வதற்கு இந்திய மக்கள் வாய்ப்பளித்தது என் அதிர்ஷ்டம் என்று, இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, முதல் நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு தேர்தல் நடைமுறையும் நியாயமானதாக வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது என்று கூறினார். இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியது தனது அதிர்ஷ்டம் என்று கூறிய பிரதமர் மோடி, இந்த வரலாற்று வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி மட்டுமன்றி ஒட்டுமொத்த ஜனநாயக உலகிற்கும் கிடைத்த வெற்றி என்றும் கூறினார். அனைவரும் ஒன்றிணைந்து வரும் காலங்களில் பசுமையான யுகத்தை உருவாக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்காக வாழ்க்கை என்ற திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com