"உயர்வகுப்பு இட ஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும்" - அன்புமணி

உயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி என்பதற்கு வங்கி தேர்வு முடிவே சாட்சி என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"உயர்வகுப்பு இட ஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும்" - அன்புமணி
Published on
உயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி என்பதற்கு வங்கி தேர்வு முடிவே சாட்சி என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாரத ஸ்டேட் வங்கியில், காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வுகளுக்கான தகுதி மதிப்பெண், தாழ்த்தப்பட்ட வகுப்பினரை விட, உயர்வ வகுப்பு ஏழைகளுக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்த புள்ளி விவரமும் இல்லாமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர் வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com