காடு வெட்டி குரு படத்திறப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்

அண்மையில் காலமான வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் படத்திறப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுதார் பாமக நிறுவனர் ராமதாஸ்
காடு வெட்டி குரு படத்திறப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்
Published on

அண்மையில் காலமான வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் உருவப்படத்திறப்பு விழா, அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு, குரு படத்தை திறந்து வைத்தார்.

அப்போது, உணர்ச்சிவசப்பட்ட டாக்டர் ராமதாஸ், கண்ணீர் விட்டு அழுதார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே. மணி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் த லைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com