"வன்முறையில் ஈடுபடுவோர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" - பிரதமர் மோடி பேச்சு

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
"வன்முறையில் ஈடுபடுவோர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" - பிரதமர் மோடி பேச்சு
Published on

வாஜ்பாயின் பிறந்த நாளை ஒட்டி, உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சில், வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, சுகாதாரம், நோய் தடுப்பு மற்றும் அனைவருக்கும் மருத்துவ வசதி இவை தான் நமது குறிக்கோள் என்றார். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தாங்கள் செய்தது சரி தானா? என்று தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com