திருப்பூருக்கு பிரதமர் மோடி 10 ஆம் தேதி வருகை...

அரசு முறைப்பயணமாக 10 ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்சிக்களிலும் அதனைத் தொடர்ந்து பாஜக நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
திருப்பூருக்கு பிரதமர் மோடி 10 ஆம் தேதி வருகை...
Published on
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவின் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தில் பல கட்ட சுற்றுப் பயணம் செய்ய உள்ளனர் . அரசு முறைப்பயணமாக 10 ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடி, அரசு நிகழ்சிக்களிலும் அதனைத் தொடர்ந்து பாஜக நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். 12 ஆம்தேதி உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நெல்லையிலும் 15 ஆம் தேதி மத்திய அமைச்சர் நிதின்கட்கரி சென்னையிலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள் . பாஜக தேசிய தலைவர்அமித்ஷா வரும் 14 ஆம் தேதி ஈரோட்டிலும் 22 ஆம் தேதி ராமேஸ்வரத்திலும் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் இது தவிர 12ம்தேதி " எங்கள் குடும்பம் பாஜக குடும்பம்" என பாஜக தொண்டர்கள் தங்கள் வீட்டின் முன் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்தவர்கள் தங்கள் வீட்டின் முன்பு தாமரை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது . .அடுத்த மாதம் 2 ஆம் தேதி வாக்குச்சாவடி வாரியாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1000 இருசக்கர வாகனங்கள் என 2லட்சத்து 34ஆயிரம் இருசக்கர வாகன பேரணியையும் தமிழகம் முழுவதும் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது .
X

Thanthi TV
www.thanthitv.com