நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, மீண்டும் பிரதமராக மோடி வரும் 30ம் தேதி இரவு 7 மணி அளவில் பதவியேற்கிறார். இதற்கான விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. அப்போது, அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், வங்காள விரிகுடா கடல்பகுதியின் அருகே அமைந்திருக்கும் நாடுகளின் கூட்டமைப்பான "பிம்ஸ்டெக்" அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதன்படி, இந்தியாவை சுற்றிலும் உள்ள வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.