PM Modi | Sanskrit | "சமஸ்கிருதம் புறக்கணிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது.." PM மோடி
தொடர்பு மொழியாக இருந்த சமஸ்கிருதம் சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரு காலத்தில் சமஸ்கிருதம் தொடர்பு மொழியாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
அடிமைத்தனத்தின் காலத்திலும், சுதந்திரத்திற்குப் பிறகும், சமஸ்கிருதம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது துரதிஷ்டவசமானது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கலாச்சாரம், சமூக ஊடகங்கள் சமஸ்கிருதத்திற்கு ஒரு புதிய வாழ்க்கையை அளித்துள்ளதாகவும்,
இளைஞர்கள் சமஸ்கிருதத்தில் சுவாரஸ்யமான பணிகளைச் செய்வதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் இளைஞர்கள் சமஸ்கிருதத்தைப் பற்றி பேசுவதைக் காணக்கூடிய பல ரீல்ஸ்களைக் காணலாம் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாகரிகத்தின் மதிப்புகள் மற்றும் மரபுகளை சுமந்து செல்லும் பணியை சமஸ்கிருதம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
