நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : "நீதி வென்றுள்ளது" - பிரதமர் மோடி கருத்து

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால் நீதி வென்றுள்ளது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : "நீதி வென்றுள்ளது" - பிரதமர் மோடி கருத்து
Published on
நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால், நீதி வென்றுள்ளது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர், பெண்களுக்கான கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது அதி முக்கியமானது என கூறியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் மகளிர் சக்தி சாதனை படைத்துள்ளது என்றும், அனைவரும் ஒன்றிணைந்து, பெண்களுக்கான முன்னேற்றம், சமத்துவ வாய்ப்புகளை வழங்கிடும், நாட்டை உருவாக்கிட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com