PM Modi News | தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி - பிரதமர் மோடி கண்டனம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயிடம் தொலைபேசியில் உரையாடிய பிறகு வெளியிட்டுள்ள பதிவில்,
தலைமை நீதிபதி மீதான தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டபோது நீதிபதி கவாய் அமைதி காத்தது பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார். இது, நீதித் துறையின் மதிப்புகள், நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான நீதிபதியின் உறுதிப்பாட்டை காட்டுகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Next Story
