PM Modi | Kovai | நாளை மறுநாள் தமிழகம் வரும் பிரதமர் - மொத்தமாக மாறிய ரூட்
பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் கோவை கொடிசியாவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தருவதால், அன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்து காவல் துறை ஆணையர் சரவண சுந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் சாலை வழியாக வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
அந்த வாகனங்கள் எல் அன்ட் டி பைபாஸ் சாலை வழியாக மாற்றிவிடப்படும்.
விமான நிலையத்திற்குள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை கால் டாக்ஸிகள் உட்பட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
பயணிகள் பகல் 12 மணிக்கு முன்பே வர அறுவுறுத்தப்படுகிறார்கள். 12 மணிக்கு மேல் வரும் பயணிகள், சித்ரா சந்திப்பில் இறங்கி நடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
Next Story
