PM Modi | Congress | BJP | அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு அடித்த பிரதமர் மோடி

x

டெல்லியில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய பிரதமர், முந்தைய அரசுகள் விவசாயத் துறைக்கு எதுவும் செய்யாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும்,

இதுவே விவசாயத் துறை பலவீனமடைந்து வருவதற்கு ஒரு காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

விவசாயத் துறையில் விதைகள் முதல் சந்தைகள் வரை பாஜக அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர்,

இதன் விளைவாக கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விவசாய ஏற்றுமதி கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

காங்கிரஸ் அரசு 10 ஆண்டுகளில், உரங்களுக்கு 5 லட்சம் கோடி மானியம் மட்டுமே வழங்கியதாகவும்,

ஆனால் தங்கள் அரசு கடந்த 10 ஆண்டுகளில் 13 லட்சம் கோடிக்கு மேல் மானியம் வழங்கியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி குறைப்பு கிராமப்புற இந்தியாவிற்கும் விவசாயிகளுக்கும் அதிகபட்ச நன்மைகளை அளித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்