சபரிமலை விவகாரம் : "கேரள அரசு மோசமாக நடந்து கொண்டது" - பிரதமர் மோடி

மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி, முறையாக செலவிடப்படவில்லை என்று கேரள அரசு மீது, பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சபரிமலை விவகாரம் : "கேரள அரசு மோசமாக நடந்து கொண்டது" - பிரதமர் மோடி
Published on
மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி, முறையாக செலவிடப்படவில்லை என்று கேரள அரசு மீது, பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார். கொல்லத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கேரளாவில் உள் கட்டமைப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலையை கடைபிடிப்பதாக புகார் தெரிவித்தார். மக்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள், ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் போல் செயல்படுகின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com