நெருங்கும் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : பிரதமர் நரேந்திர மோடி தீவிர வாக்கு சேகரிப்பு

தெலுங்கானா வளர்ச்சியடைய வேண்டும் என்றால் வாக்காளர்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.
நெருங்கும் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : பிரதமர் நரேந்திர மோடி தீவிர வாக்கு சேகரிப்பு
Published on
தெலுங்கானா வளர்ச்சியடைய வேண்டும் என்றால் வாக்காளர்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார். தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல், வருகிற 7 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி அங்கு பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். ஐதராபாத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அவர், தெலுங்கானாவை வழி நடத்த சரியான தலைவர் இல்லாததால் பின் தங்கியுள்ளதாக கூறினார். வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவது வளர்ச்சியை கொண்டு வராது என பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஜாதி மற்றும் வம்ச அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு தெலுங்கானா மக்களுக்கு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com