தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நாளை நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். இதற்காக, சுமார் 70 ஏக்கர் பரப்பிலான திறந்த வெளியில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் வகையில், பொதுக்கூட்டம நடைபெறும் பகுதியில் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையை ஓட்டி ஆண்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் அனைத்தும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.