PM Modi | 15 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்.. பிரதமர் செல்லும் முன்னே அசாம் CM வெளியிட்ட வீடியோ
இன்று பிரதமர் மோடி மேற்குவங்க மற்றும் அசாம் மாநிலங்களுக்கு பயணிக்க உள்ளார். மேற்கு வங்கத்தில் சுமார் மூவாயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அசாமில் 15 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டவுள்ளார். கவுகாத்தி லோக்ப்ரியா கோபிநாத் பர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தையும் அவர் திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்றை அசாம் முதலமைச்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Next Story
