மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் கிரித் பிரேம்ஜி பாய், இறந்தவரின் உடலை ரயில் மூலமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வசதிகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், இந்த வசதி பல ஆண்டுகளாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். விதிமுறைகளை பின்பற்றி இறந்தவர்களின் உடல்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ரயில் மூலமாக கொண்டு செல்லலாம் எனவும் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.