பெரியார் மண்ணில் `பெரிய' வார்த்தையை விட்ட சீமானுக்கு கிளம்பிய எதிர்ப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு குமலன் குட்டை பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.அப்போது, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் கோரிக்கை என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த துணிவில்லாத அரசால், இடஒதுக்கீடு, சமூகநீதி பற்றி எப்படி பேச முடிகிறது என்று கேள்வி எழுப்பினார்.
ஈரோட்டில் சீமான் பிரசாரம் செய்ய தடை விதிக்கக் கோரி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி, நாம் தமிழர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய சீமான், “பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசுங்கள், என் தலைவன் கொடுத்த வெடிகுண்டை உங்கள் மீது வீசுகிறேன்“ என கூறியிருந்தார். இந்நிலையில், சீமான் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க கோரி, பெரியார் அம்பேத்கரிய கூட்டமைப்பு மனு அளித்துள்ளது. வன்முறை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சீமானின் பேச்சு இருந்ததாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.