"வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்" - பெரியாரை குறிப்பிட்டு CM ஸ்டாலின் சூசகம்
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவுதினத்தையொட்டி, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், பெரியாரின் புகழ் ஒளியையும் அறிவொளிளையும் தந்து நம்மை ஆளாக்கிய அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்றும் வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று லட்சியப் பயணத்தில் வெல்ல நாம் பாடுபடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று லட்சியப் பயணத்தில் வெல்ல நாம் பாடுபடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Next Story