இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக போராட்டத்தில் குதித்த மக்கள் - அதிகாரி கொடுத்த உறுதியால் மாறிய முடிவு
#protest | #byelection இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக போராட்டத்தில் குதித்த மக்கள் - அதிகாரி கொடுத்த உறுதியால் மாறிய முடிவு சுண்ணாம்புக்காடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட சுண்ணாம்புக்காடு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டு குழாய்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், பாதி பணிகள் மட்டுமே முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை அனுமதி மறுப்பால் பணிகள் தடைபட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், குடிநீருக்காக 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை 3,500 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர். இடைத்தேர்தலை புறக்கணிப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, ஒரு வாரத்தில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
