"ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு- வன்மையாக கண்டிக்கிறோம்" - அவ்வை நடராசன் உள்ளிட்டோர் இணைந்து கண்டன அறிக்கை

ப.சிதம்பரத்தின் கைது மற்றும் ஜாமின் மறுப்பு ஆகியவை, ஜனநாயகப் படுகொலை என, தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு- வன்மையாக கண்டிக்கிறோம்" - அவ்வை நடராசன் உள்ளிட்டோர் இணைந்து கண்டன அறிக்கை
Published on
ப.சிதம்பரத்தின் கைது மற்றும் ஜாமின் மறுப்பு ஆகியவை, ஜனநாயகப் படுகொலை என, தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர்களான அவ்வை நடராசன், ம. ராசேந்திரன் ஆகியோரும், சுப.வீரபாண்டியன், கவிஞர் சல்மா, கவிஞர் ஏகாதசி உள்ளிட்டோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில், ப.சிதம்பரம் மீது பொய் வழக்குகளை புனைந்திருப்பதாகவும், அதை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளனர். ப. சிதம்பரம், சிறந்த அரசியல்வாதி, உயர்ந்த இலக்கியவாதி, நாட்டின் குறிப்பிடத்தக்க பொருளியல் அறிஞர் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர்கள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் மூத்த வழக்கறிஞரான ப.சிதம்பரத்தின் மீது பொய் வழக்கு போட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com