"தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம்.." காட்டமாக பேசிய ராமதாஸ் | PMK | Anbumani | Thanthitv

தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்போவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்கத்தின் 45-வது ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வன்னியர் சங்க கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், வன்னியர் இட ஒதுக்கீடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி, தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com