கட்சி கொடியை பார்த்ததும் சென்னை வந்த சிறுமி.. மஞ்சள் ரோஜாவுடன் விஜய்யின் வீட்டில் வெயிட்டிங்
நடிகர் விஜய் தமது கட்சி கொடியை அறிமுகம் செய்த நிலையில் வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரது வீட்டின் முன்பு
ஒரு சிறுமி காத்திருந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை சேர்ந்த குளோரி என்ற பெண்ணுடன் வந்திருந்த அசீதா என்ற அச்சிறுமி கையில் மஞ்சள் ரோஜாவுடன் நடிகர் விஜய்யின் வீட்டின் முன்பு நீண்ட நேரம் காத்திருந்தார். பின்னர் பேசிய குளோரி , சிறுமி அசீதாவுக்கு நடிகர் விஜய்யை ரொம்ப பிடிக்கும் என்றும், அவரை பார்ப்பதற்காக ஆரணியிலிருந்து சென்னை வந்ததாகவும் கூறினார்.
