சபாநாயகர் vs தயாநிதி மாறன் - நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் | Parliament
சமஸ்கிருத மொழியில் அவை நடவடிக்கைகளை மொழிபெயர்ப்பது குறித்து கேள்வி எழுப்பிய திமுக எம்.பி தயாநிதி மாறனை, சபாநாயகர் ஓம் பிர்லா கடிந்து கொண்ட நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. மக்களவை நடவடிக்கைகளை சமஸ்கிருதம், மைதிலி, உருது உள்ளிட்ட மேலும் ஆறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். அப்போது பேசிய தயாநிதி மாறன், எந்த மாநிலத்திலும் பேசப்படாத சமஸ்கிருத மொழிக்கு மொழிபெயர்ப்பு வசதியை வழங்கி மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், பாரதத்தின் மூல பாஷை சமஸ்கிருதம் எனவும், 22 மொழிகளில் விவாதங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்படும் போது, உங்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் இந்தியோடு மட்டும் என்ன பிரச்சனை எனவும் கடிந்து கொண்டார்.
Next Story