2024 தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை | 2024 election

2024 தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை | 2024 election
Published on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாதம் முதலாவது வாரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம், டெல்லி மற்றும் ஹரியானா எல்லையை ஒட்டிய துவாரகாவில் நடைபெற்று வருகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்த நிலை தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com