

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இளையான்குடி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை மிக கடுமையாக விமர்சித்தார். மேலும், திமுக கதாநாயகனாக இருப்பதாகவும், பிரதமர் மோடி வில்லனாக இருப்பதாகவும் கூறினார். அதிமுக தற்போது அடிமையாக உள்ளதாகவும் உதயநிதி விமர்சனம் செய்தார்.