பரபரப்பான சூழ்நிலையில், வருகிற திங்கட்கிழமை, நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் துவங்குகிறது. இக்கூட்டத்தில், பிரியங்கா காந்தியின் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வருகிற டிசம்பர் 13 ம் தேதி வரை, இந்த கூட்டத்தொடர் நடைபெறும். இதனிடையே, கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது குறித்து இன்று விவாதிக்க, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.