Parliament | "மசோதாக்களால் மாறும் மக்களின் வாழ்வு.." - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு உறுதி

x

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களால் மக்களின் வாழ்வு மேம்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வந்தே மாதரம் பாடல் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின் மூலம் மக்களின் தேசப்பற்றை நாம் தட்டியெழுப்பியதாக பெருமிதம் தெரிவித்தார்.

தேர்தல் நடைமுறை மற்றும் சீர்திருத்தம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தால் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் கிடைத்ததாக கூறிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, தற்போதுதான் முதன்முறையாக தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தனித்தனி விவாதம் அரங்கேறியதாக சுட்டிக்காட்டினார். இதனிடையே, குளிர்கால கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக நடைபெற்றதாக கூறிய மக்களவை செயலகம், மாநிலங்களவை 121 சதவீதமும், மக்களவை 111 சதவீதமும் செயல்பாட்டு திறனை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்