நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவக்கம் - பிரணாப் முகர்ஜி,வசந்தகுமார் , பண்டிட் ஜஸ்ராஜ் ஆகியோருக்கு இரங்கல்

நாடாளுமன்ற மக்களவையில் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ். எம்.பி வசந்தகுமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவக்கம் - பிரணாப் முகர்ஜி,வசந்தகுமார் , பண்டிட் ஜஸ்ராஜ் ஆகியோருக்கு இரங்கல்
Published on
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது. கூட்டம் துவங்கியதும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார். அப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நற்பண்பாளர் என புகழாரம் சூட்டினார். அவரது மறைவுக்கு மக்களவை ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக கூறிய சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழகத்தை சேர்ந்த மறைந்த காங்கிரஸ் எம்.பி. எச். வசந்தகுமார், இந்துஸ்தானி இசைக்கலைஞர் பண்டின் ஜஸ்ராஜ் உள்ளிட்டோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசித்தார். இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மறைந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக, மக்களவை ஒரு மணி நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com