"சென்னையில் இனி கார் வாங்கினால் இது கட்டாயம்.."
"கார் வாங்குவோருக்கு பார்க்கிங் சான்று கட்டாயமாக்க வேண்டும்"
இடநெருக்கடி காரணமாக சென்னையில் புதிய கார் வாங்குபவர்கள் parking சான்றிதழ் வாங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று, சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில், பணிகள் நிலைக் குழுத் தலைவர் சிற்றரசு வலியுறுத்தினார். மேயர் பிரியா, தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர்,
சென்னையில் வசிப்பவர்கள் வாகன நிறுத்தும் வசதி இல்லாமல் கார்களை வாங்குவதால், இடையூறு ஏற்படுவதால், parking சான்றிதழ் பெறுவதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதேபோல், சாலையில் காரை நிறுத்தினால் மாநகராட்சி நிர்வாகம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர் அதியமான், வலியுறுத்தினார்.
Next Story
