பஹல்காம் தீவிரவாத தாக்குதல் | ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு |

x

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காமில் கொடூரமாக நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா ஆகியோரிடம் பேசியதாகவும், நிலைமை குறித்து கேட்டறிந்ததுடன், சம்பவத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்