சமூக வலைத்தளத்தில், கருத்து தெரிவித்துள்ள அவர், விமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை பற்றி கருத்து கூற இந்திய விமானபடை துணைத் தளபதி மறுத்து விட்ட நிலையில், 300 முதல் 350 பேர் உயிரிழந்தார்கள் என்ற கருத்தை பரப்பி விட்டது யார் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்திய குடிமகன் என்ற முறையில் அரசை நம்புவதாகவும், ஆனால் உலகம் நம்புவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும் என சிலர் சொல்வதில் என்ன தவறு எனவும் ப.சிதம்பரம் கருத்து பதிவிட்டுள்ளார்.