அரசியலில் புதிய பகீர் கிளப்பிய ஓபிஎஸ்

x

நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஒன்றுபட்டால்தான் அதிமுகவால் வெற்றி பெற முடியும் என்று அவர் தெரிவித்த நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக பதிலடி கொடுத்தார். இந்நிலையில், அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்றும், துரோகம் நிச்சயம் வீழும் நய வஞ்சகம் நசுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். பொறுத்தார் பூமியாள்வார், தமிழ்நாட்டை ஆளப் போவது யார் என்பது 2026 மே மாதம் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்