OPS | TN Politics | "I will announce..." - OPS's sensational statement
அரசியல் நிலைப்பாடு குறித்து டிச. 23ல் அறிவிக்கும் ஓ.பி.எஸ்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 23ம் தேதி முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக நிர்வாகிகளுடன் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசித்த ஓ.பன்னீர்செல்வம், டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.
இத்தகைய சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருவதால், நாளை நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டத்தை பன்னீர்செல்வம் ஒத்திவைத்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில், வரும் 23ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி மாலை 5 மணியளவில், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள YMCA திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
