பஞ்சமி நிலம் குறித்த விவகாரம் - ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்
பஞ்சமி நிலம் குறித்த விவகாரத்தின் தனது பெயரில் பட்டா பதிவு செய்யப்படவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹரிஷங்கர் என்பவரிடம் இருந்து நிலம் வாங்கிய சுப்புராஜ், தன்னிடம் நிலத்தை விற்றதாகவும், ஆனால் 2024-ஆம் ஆண்டு 81 சென்ட் நிலத்தை மீண்டும் சுப்புராஜூக்கே எழுதி கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் ஊடகங்களில் வெளியானது போல், நீதிபதிகள் உத்தரவிட்டதாக தனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Next Story