மத்திய அரசுக்கு எதிராக ஓபிஎஸ் குரல்
மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான்
நிதி ஒதுக்கீடு என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கூற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும் இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம் எனவும் தெரிவித்துள்ளார். கல்வி நிதி ஒதுக்கீடு தொடர்பான முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வதோடு, உடனடியாக தமிழ்நாட்டிற்கான நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story