ஒருமுறையாவது மோடி அங்கே செல்வாரா என்று கேட்ட எதிர்க்கட்சிகள் - பிரதமரின் திருப்பமான முடிவு?
செப்.13ல் மணிப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்?
இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு வருகிற 13ஆம் தேதி பிரதமர் மோடி முதல்முறையாக பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், பிரதமரின் வருகை தொடர்பான இறுதி பயணத் திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை வெடித்த பிறகு மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க இத்தனை ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒருமுறைகூட மணிப்பூருக்கு செல்லாததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 13ஆம் தேதி மிசோரம் தலைநகர் ஐஸ்வாலுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அந்த மாநிலத்தின் முதல் ரயில்வே நிலையமான பைராபி-சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைக்கிறார்.
Next Story
