Rahul Gandhi vs Election Commission| ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் பகிரங்க சவால்
ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் சவால்
மகாராஷ்டிரா தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க ராகுல் காந்தியை நேரில் சந்திக்க தயார் என இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
முன்னணி நாளிதழில் ராகுல் காந்தி எழுதிய கட்டுரைக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 12 அன்று தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் தங்களுக்கு இன்னும் இந்த தேர்தல் விவகாரத்தில் சிக்கல்கள் இருந்தால், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதலாம் என்றும்
அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்க இரு தரப்பினருக்கும் வசதியான தேதி மற்றும் நேரத்தில் தங்களை நேரில் சந்திக்க தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
