மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆதார் சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய, அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார், சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார்.மேலும், ஆதார் கார்டு பயனாளர்களின் தனி நபர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசின் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி வந்த பிறகே சிறப்பாக செயல்படுத்தப்பட்டதாக ரவீந்திரநாத் குறிப்பிட்டார்.