தருமபுரியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு 3 அமைச்சர்கள்தான் தொடர்ந்து பதில் சொல்கிறார்கள் என்று விமர்சித்தார். மேலும், ஒரு கேள்வி கேட்டால் அதற்கு தொடர்பில்லாத வேறு பதிலை அமைச்சர்கள் அளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.