NDA Alliance | NDA கூட்டணியில் நீடிக்கும் இழுபறி - பயணத்தை ஒத்திவைத்த கோயல்.. பரபரப்பான கமலாலயம்

பயணத்தை ஒத்திவைத்த கோயல்.. பரபரப்பான கமலாலயம்

#ndaalliance #piyushgoyal #admkbjp என்.டி.ஏ. தொகுதி பங்கீடு குறித்து பியூஷ் கோயல் தீவிர ஆலோசனை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்றது. பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை நீடித்தது. இந்தக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜகவுக்கான தொகுதி பங்கீடு உறுதியான நிலையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது மற்றும் தேர்தல் பணிக் குழுக்களை அமைப்பது குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. இதன் காரணமாக இரவே டெல்லி செல்லவிருந்த பியூஷ் கோயல், தனது பயணத்தை ஒத்திவைத்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் இறுதி உடன்பாடு இன்றே எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com