ஒன் டூ ஒன் மீட்டிங் போட்ட CM - அடுக்கடுக்கான கேள்வி..பரபரக்கும் அறிவாலயம்
2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக தொகுதி வாரியாக தி.மு.க நிர்வாகிகளை, கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.
பட்டுக்கோட்டை, மணப்பாறை, பாபநாசம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்,திமுக ஒன்றியச் செயலாளர்களிடம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் இதுவரை எத்தனை வீடுகளுக்கு சென்று பொது மக்களை சந்தித்துள்ளீர்கள்?... பொதுமக்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது?...திமுக அரசின் திட்டங்கள் பொதுமக்களிடம் சரியாக சென்று சேர்ந்துள்ளதா? என்பன உள்ளிட்ட விவரங்களையும் முதல்வர் கேட்டறிந்தார்.
Next Story