தமிழில் பதவி பிரமாணம் - கமலுக்கு CM ஸ்டாலின் அனுப்பிய மெசேஜ்

x

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஆற்றிய பணிகள்.. முதலமைச்சர் வாழ்த்து

நாடாளுமன்ற வரலாற்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் சங்கநாதமென முழங்கியதாக பாராட்டியுள்ளார். இதேபோல், சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மாநிலங்களவையில் மீண்டும் தன்னுடைய அழுத்தமான வாதங்களை வைத்து உரிமைக்குரல் எழுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் புதிதாகப் பொறுப்பேற்று தங்களது கருத்துகளைப் பதிவு செய்யவுள்ள கமல்ஹாசன், எஸ்.ஆர்.சிவலிங்கம், சல்மா ஆகியோருக்கும், அவர்களது பணி சிறக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்