நாதக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த வேல்முருகன்.. கடுப்பாகி தம்பிகள் எடுத்த அதிரடி முடிவு

x

நாதக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த வேல்முருகன்.. கடுப்பாகி தம்பிகள் எடுத்த அதிரடி முடிவு

பொய்யான தகவலை வெளியிட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது நாம் தமிழர் கட்சியினர் வாணியம்பாடி போலீசில் புகார் அளித்துள்ளனர். வாணியம்பாடியை சேர்ந்த ஸ்ரீராம், வைரமுத்து ஆகியோர், நாம் தமிழர் கட்சி பொறுப்புகளில் உள்ளனர். ஆனால், வாணியம்பாடியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வேல்முருகன், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீராம், வைரமுத்து உள்ளிடோர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளனர் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த நாம் தமிழர் கட்சியினர் உண்மை தன்மை அறியாமல் செய்தி வெளியிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்