TVK | NTK | Politics | அமைச்சர் ஜெகதீஸ்வரி முன்னிலையில்.. தவெகவில் இணைந்த நாதகவினர்
TVK | NTK | Politics | அமைச்சர் ஜெகதீஸ்வரி முன்னிலையில்.. தவெகவில் இணைந்த நாதகவினர்
#TVK #NTK #Politics
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மாநில ஒருங்கிணைப்பாளர் க. ராமசுப்பிரமணி உள்ளிட்ட 27 பேர், தமிழக வெற்றிக் கழகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி முன்னிலையில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நாராயணன், தொழிற்சங்கப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வெ. பாலமுருகன், மாவட்டத் தலைவர் ச. சீனிவாசன், மாவட்டப் பொருளாளர் அ. பாலமுருகன் உள்ளிட்டோர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியை நேரில் சந்தித்து தங்களைத் தவெகவில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக் கட்சியில் இருந்து இணைந்தவர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி சால்வை அணிவித்து, உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். மேலும், புதிதாக இணைந்தவர்களை மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களாகக் கருத மாட்டோம் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.... மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை தமிழக வெற்றிக் கழக குடும்பத்தின் உறுப்பினர்களாக மதித்து, உரிய முக்கியத்துவமும் மரியாதையும் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதியளித்துள்ளார். இதனிடையே, மேலும் பல நிர்வாகிகளும் உறுப்பினர்களும் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகப் புதிதாக இணைந்தவர்கள் அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் தெரிவித்தனர்.
